search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,224-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த வாரம் குறைவு காணப்பட்டு ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.576 அதிகரித்தது மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 296 ஆகவும் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 537 ஆகவும் இருந்தது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்தது. சென்னையில் இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.36 ஆயிரத்து 224-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4 ஆயிரத்து 528 ஆக உள்ளது.

    வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.74 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்கிறது.

    Next Story
    ×