search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளை மலையில் தீவிபத்து
    X
    தோவாளை மலையில் தீவிபத்து

    தோவாளை அருகே மலையில் பயங்கர தீ

    பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோவாளை மலையின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள், வன ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஆரல்வாய்மொழி:

    பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோவாளை மலையின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென எரிந்து பல இடங்களுக்கும் பரவியது. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின்பேரில் வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள், வன ஊழியர்கள் என அனைவரும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பற்றி எரிந்த தீயை அணைப்பதில் சிரமமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    அதே சமயத்தில் மலை பகுதியில் வனவிலங்குகள் ஏராளமாக வசிப்பதால், தீயின் கோரப்பிடியில் அவை சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாகர்கோவிலில் வீட்டு மாடியில் இருந்தவாறு சிலர், மலையில் பற்றி எரிந்த தீயை பார்த்தனர்.
    Next Story
    ×