search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    ‘டார்ச் லைட்’ சின்னம் கோரி கமல்ஹாசன் கட்சி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ்

    ‘டார்ச் லைட்’ சின்னம் கோரி கமல்ஹாசன் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் ‘பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் தங்களுக்கு ‘பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அதே சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரி, சென்னை ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.ஜி.மவுரியா வழக்கு தொடர்ந்தார்.

    இதற்கிடையில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அச்சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி அக்கட்சியின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டதால், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில், டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், கேட்ட சின்னம் கிடைத்துவிட்டதால் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×