என் மலர்

  செய்திகள்

  வைகை எக்ஸ்பிரஸ்
  X
  வைகை எக்ஸ்பிரஸ்

  வருகிற 31-ந் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் வரை இயக்கப்படும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 31-ந் தேதி ஒரு நாள் மட்டும் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
  மதுரை:

  மதுரையில் இருந்து சென்னைக்கு காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து, வருகிற 31-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

  மேலும், அன்றையதினம் சென்னை-காரைக்குடி சிறப்பு ரெயில்(வ.எண்.02605) சென்னையில் இருந்து சுமார் 1½ மணி நேரமும், சென்னை-திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.06105) 2 மணி நேரமும், சென்னை-கொல்லம் சிறப்பு ரெயில் (வ.எண்.06105) சுமார் 1 மணி நேரமும், சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (வ.எண்.02633) சுமார் 1 மணி நேரமும் தாமதமாக சென்னையில் இருந்து புறப்படும்.
  Next Story
  ×