என் மலர்

  செய்திகள்

  காளையை அடக்க மல்லுகட்டிய வீரர்.
  X
  காளையை அடக்க மல்லுகட்டிய வீரர்.

  500 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு- காளைகளை அடக்க மல்லுக்கட்டிய வீரர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
  குமாரபாளையம்:

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக முதலில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் உறுதிமொழியை வாசித்தார். அதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

  அதன்பின் அமைச்சர் தங்கமணி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், சரோஜா, டாக்டர் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விழாவில் முன்னிலை வகித்தனர்.

  அமைச்சர் தங்கமணி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.


  முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தொடர்ந்து திமிலை பிடித்து அடக்க முயற்சித்தனர். இப்போட்டியில் சுமார் 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க ஒரு மணி நேரத்திற்கு 50 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

  மாடுபிடி வீரர்கள் கைகளுக்கு சிக்காமல் திமிறிக்கொண்டு எகிறி குதித்து பல காளைகள் ஓடியது. காளைகளை அடக்க மாடு பிடிவீரர்கள் மல்லுகட்டினர்.

  அப்போது பார்வையாளர்கள் காளைகளையும், வீரர்களையும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

  இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கட்டில், பீரோ, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

  மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 5 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. அதுபோல் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மாடுகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதா? என்பதை அறிய கால்நடை மருத்துவ குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்தனர்.

  இப்போட்டியை காண நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, குமார பாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.
  Next Story
  ×