என் மலர்

  செய்திகள்

  ராகுல் காந்தி
  X
  ராகுல் காந்தி

  தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன் - ராகுல்காந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
  கோவை:

  தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

  அந்த வகையில், தேர்தல் பிரசாரத்திற்காக 3 நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்துளார்.

  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் ராகுல்காந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

  இந்நிலையில், ராகுல்காந்தி தனது முதல்கட்ட பிரசாரத்தை இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார். கோவையின் சின்னியபாளையத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  * தமிழகத்தின் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை

  * தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரதமர் (மோடி) புரிந்து கொள்ளவில்லை

  *இந்தியாவில் ஒரு மொழி மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் (மோடி) விரும்புகிறார்

  * தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும்  

  * தமிழர்களின் உரிமைகளை, எதிர்பார்ப்புகளை பாதுகாப்பேன்.

  * தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் தமிழகமே இந்தியாக இருக்கும்

  என்றார்.
  Next Story
  ×