search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணு உலை
    X
    கூடங்குளம் அணு உலை

    கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி 3 மாதங்களில் நிறைவடையும்

    கூடங்குளம் 2-வது அணி உலையில் பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணியையும் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் மாற்றும் பணி தொடங்கியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வந்தன. இதில் முதலாவது அணு மின் உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    2-வது அணுமின் உலையில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால், அவ்வப்போது நிறுத்தி நிறுத்தி இயக்கப்பட்டது. அங்கு 700 மெகாவாட் வரையே மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி சிறிய பழுது காரணமாக 2-வது அணு உலை நிறுத்தப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் என்ஜினீயர்களும், விஞ்ஞானிகளும் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கூடங்குளம் 2-வது அணி உலையில் பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணியையும் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் மாற்றும் பணி தொடங்கியது.

    இந்த பணி வருகிற மார்ச் மாதம் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் 2-வது அணுமின் உலையில் அதுவரை மின் உற்பத்தி இருக்காது. மார்ச் மாதத்திற்கு பிறகே மின் உற்பத்தி தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இதனால் 2-வது அணு உலையில் இருந்து தமிழகத்துக்கு கிடைத்து வந்த 400 மெகாவாட் மின்சாரம் மார்ச் மாதம் வரை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×