என் மலர்

  செய்திகள்

  94 வயதான எச்.வி.ஹண்டே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
  X
  94 வயதான எச்.வி.ஹண்டே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

  94 வயதான எச்.வி.ஹண்டே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
  சென்னை:

  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கிடைக்கப்பெற்ற ‘கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டுக்கொண்டேன். 94 வயதான நான், என்னுடைய பாதுகாப்புக்காக தடுப்பூசி போடவில்லை. அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே, வைரசை தோற்கடிக்கமுடியும் என்பதற்காக ஜனநாயக கடமையாற்றும் வகையில் தடுப்பூசி போட்டிருக்கிறேன். கொரோனா தடுப்பூசி போடும்போது வலி இல்லை. அந்த தடுப்பூசி மூலம் எனக்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை. தடுப்பூசிக்கு பின்னர், என்னுடைய வழக்கமான செயல்பாடுகளில் எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. தடுப்பூசியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும்.

  பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, கொரோனாவுக்கு எதிராக போராடும் நம்முடைய விஞ்ஞானிகளை நம்புகிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தமிழக குழு நாட்டிலேயே சிறப்பான குழுவாக விளங்குகிறது. உங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சமயம் வரும்போது, தயங்காமல் போட்டுக்கொள்ளுங்கள்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×