search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வரும் 26-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

    திமுக-வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்த ஆண்டின் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. வரும் 29-ம் தேதி காலை 9 மணிமுதல் 2 மணி வரை மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தொடரில் திமுக பல்வேறு கட்சியியின் எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தின்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற உள்ள திமுக எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்ற தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 26-ம் தேதி பகல் 12 மணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
    Next Story
    ×