search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு பவுன் மோதிரத்தை மீட்டு கொடுத்த போது எடுத்த படம்.
    X
    ஒரு பவுன் மோதிரத்தை மீட்டு கொடுத்த போது எடுத்த படம்.

    குப்பையில் தவறவிட்ட ஒரு பவுன் மோதிரத்தை மீட்டு கொடுத்த பெண் தூய்மை பணியாளர்

    கும்பகோணம் அருகே குப்பையில் தவறவிட்ட ஒரு பவுன் மோதிரத்தை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேடி எடுத்து கொடுத்த பெண் தூய்மை பணியாளரை பொதுமக்கள் பாராட்டினர்.
    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பேரூராட்சி, அசோக் நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அனந்தலெட்சுமி (வயது 45). இவர் நேற்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும், தூய்மை பணியாளர் பாக்கியம் (35), என்பவரிடம் வீட்டில் உள்ள குப்பைகளோடு, பூஜை அறையில் இருந்த பழைய பூக்களையும் அளித்தார்.

    பின்னர் பூஜை அறைக்கு சென்று அங்கு வைத்திருந்த மோதிரத்தை பார்த்தபோது காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார்.

    பூக்களோடு மோதிரமும் சென்றிருக்கலாம் எனக் கருதி பேரூராட்சி அலுவலகத்துக்கு அனந்தலெட்சுமி, சென்று செயல் அலுவலர் சிவலிங்கத்திடம் மோதிரத்தை குப்பையில் தவறுதலாக போட்டு விட்டதை தெரிவித்தார்.

    இதையடுத்து குப்பைகளை தரம் பிரிக்கும் வளம்மீட்பு பூங்காவுக்கு சென்ற பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர் பாக்கியம் கொண்டு வந்த குப்பைகளை பார்த்த போது, அதில் மோதிரம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அனந்தலெட்சுமியிடம், செயல் அலுவலர் சிவலிங்கம் மோதிரத்தை ஒப்படைத்தார்.

    குப்பைகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மோதிரத்தை தேடி எடுத்து கொடுத்த தூய்மை பணியாளர் பாக்கியத்தை, பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
    Next Story
    ×