search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அணை
    X
    பாபநாசம் அணை

    பாபநாசத்தில் மட்டும் 723 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது

    ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் இன்று 21-ந் தேதி வரை பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் மொத்தம் 723 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம், தென்மேற்கு பருவமழையின் போதும் வடகிழக்கு பருவமழையின் போதும் இயற்கையாக மழை பெரும். இந்த பருவ காலங்களில் தென்மேற்கு பருவமழையின் போதும் நன்றாக மழை பெய்தது.

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி வரை நீடித்தது. அதுவும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் மிகவும் குறைந்த அளவே பெய்தது.

    பருவம் தவறி பெய்த ஜனவரி மாதம் அதிக அளவு மழை பெய்தது. அதுவும் ஜனவரி மாதத்தில் கடந்த 21 நாட்களில் பருவமழையின் போது மொத்தம் பெய்த மழை அளவை விட பல மடங்கு அதிகமாக பெய்தது.

    இதனால் வெள்ளம் ஏற்பட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பயிர் சேதங்கள் ஏற்பட்டது.

    பாபநாசம் அணைப்பகுதியில் கடந்த ஜனவரி 1-ந் தேதியே 95 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதன்பிறகு 4-ந் தேதியில் இருந்து தொடர்ந்து 18-ந் தேதி வரை மழை பெய்தது. இதில் 13-ந் தேதி அதிகபட்சமாக 185 மில்லிமீட்டரும், 14-ந் தேதி 178 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் இன்று 21-ந் தேதி வரை பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் மொத்தம் 723 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதுவடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மொத்த மழை அளவை விட அதிகமாகும்.

    இதுபோல மணிமுத்தாறு அணைப்பகுதியிலும் கடந்த 21 நாட்களில் மட்டும் 636.40 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் பெய்த மழையை விட இருமடங்கிற்கும் அதிகமாகும்.

    அம்பை நகரப்பகுதியில் ஜனவரி மாதம் 445 மில்லிமீட்டரும், சேரன்மாதேவியில் 296 மில்லிமீட்டரும், பாளையில் 208 மில்லிமீட்டரும், நெல்லையில் 170 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 162 மில்லிமீட்டரும் நாங்குநேரியில் 157 மில்லிமீட்டரும் கடந்த 21 நாட்களில் பெய்துள்ளது.

    இதன்படி நெல்லை மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் மொத்தம் 2797 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக இது 350 மில்லிமீட்டர் ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலமான கடந்த 3 மாதத்தில் மொத்தமாக இவ்வளவு மழை பெய்யவில்லை.

    கடந்த 21 நாட்களில் மட்டும் அதிக அளவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வருடமும் மழை காலம் முடிந்து ஜனவரி மாதமே அதிக அளவு மழை பெய்துள்ளது. எனவே வரும் காலங்களிலும் ஜனவரி மாதம் தான் அதிக மழை பெய்யுமா என்று விவசாயிகள் ஐயம் கொண்டு வருகிறார்கள்.

    அவ்வாறு ஜனவரி மாதம் அதிக மழை பெய்தால் அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்வதில் காலதாமதம் செய்ய வேண்டுமா என்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×