என் மலர்

  செய்திகள்

  முக ஸ்டாலின்
  X
  முக ஸ்டாலின்

  ’அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்’ - திமுக தலைவர் ஸ்டாலின் டுவீட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.   

  இதனால், அமைச்சர் காமராஜ் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து பூரண உடல்நலம் பெறவேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
   
  ’கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக  அறிந்தேன். அவர் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.


  Next Story
  ×