search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டி- போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க. புகார் மனு

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், சசிகலாவையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசியதாக அவரை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க. பெயரில் சென்னையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சார்பில் கட்சியின் வக்கீல்கள் ப.முத்துக்குமார், ஜே.ஜே.சரவணன் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்ப பெண் உறுப்பினர்கள் பற்றி அவதூறாகவும், கேலியாகவும் சித்தரித்து பெண்களை அவமானப்படுத்தி, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×