search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை - பாமக தலைவர் ராமதாஸ்

    வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக-வை சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசை திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனையில் அதிமுக-பாமக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை பாமக தலைவர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    * தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.#vanniyarreservation (வன்னியர் இட ஒதுக்கீடு)

    * 2. அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை  கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    என பதிவிட்டுள்ளார்.

    பாமக தலைவர் ராமதானின் இந்த டுவிட்டால் அதிமுக - பாமக இடையே கூட்டணி அமைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


    Next Story
    ×