
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லைத்தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியதுடன், மீன்பிடிவலைகளை வெட்டி இலங்கை கடற்படையினர் கடலில் வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.
மேலும் கைது செய்த மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.