
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.43 ஆயிரத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்து 37 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது.
அதன்பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் மாறி மாறி காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. இதனால் கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.
நேற்று முன்தினம் முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்த வண்ணமாய் இருக்கிறது. அன்று ரூ.640 குறைந்தது. நேற்று ரூ.490 சரிந்தது.
இந்த நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மேலும் சரிந்தது. இன்று காலை பவுனுக்கு ரூ.432 குறைந்தது.
நேற்று மாலை ஒரு கிராம் ரூ.4,754 ஆக இருந்தது. இன்று கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,700-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,600 ஆக இருக்கிறது.
கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.1,480 குறைந்துள்ளது.
இதேபோல வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டது. கிராமுக்கு ரூ.4.10 காசு குறைந்தது. ஒரு கிராம் ரூ.73.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.73,100 ஆகவும் இருந்தது.