search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க. ஸ்டாலின்
    X
    மு.க. ஸ்டாலின்

    கட்சி தலைவரின் அறிவிப்புகளை தெரிந்துக் கொள்ள ‘ஸ்டாலின் அணி’ செயலியில் இணையலாம்

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் தி.மு.க. சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தையும் உடனுக்குடன் “ஸ்டாலின் அணி” செயலியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் தி.மு.க. சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தையும் உடனுக்குடன் “ஸ்டாலின் அணி” செயலியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

    இந்த செயலியின் மூலம் வருகிற 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளில் மக்கள் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தலாம்.

    தமிழ் கலாசாரத்தையும், தமிழர் உரிமைகளையும் மீட்டெடுக்க புதிய விடியலை நோக்கிய தி.மு.க. வின் பயணத்தில் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க.வின் ஒவ்வொரு உறுப்பினரும், ஆதரவாளரும், தொண்டரும் நேரடியாக தொடர்பில் இருக்க வழிவகை செய்கிறது.

    எனவே QR Code ஐ பயன்படுத்தியோ அல்லது நேரடியாக Google Play Store / Apple App Store  தளங்களிலோ ‘STALIN ANI’ செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×