search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ராயபுரத்தில், நாளை மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தொகுதி வார்டு சபை கூட்டம்

    வடசென்னையில் ராயபுரம் சட்டசபை தொகுதி வார்டு சபை கூட்டம் ராயபுரம் ஆண்டிப்ப கிராமணி தெருவில் உள்ள பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய கிராம சபை கூட்டம் நடத்தினார்.

    இதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் கிராம சபை என்று பெயர் மாற்றம் செய்து மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து வந்தார்.

    அவரைப் போல் ஒவ்வொரு பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்ததன் காரணமாக மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை தள்ளிவைத்தார்.

    இப்போது சென்னை மாநகரில் நாளை பொது மக்களை சந்தித்து தொகுதி வார்டு சபை கூட்டம் நடத்துகிறார்.

    வடசென்னையில் ராயபுரம் சட்டசபை தொகுதி வார்டு சபை கூட்டம் ராயபுரம் ஆண்டிப்ப கிராமணி தெருவில் உள்ள ஆலடிஅருணா பப்ளிக் பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மீனவ சமுதாய மக்கள், சிறுபான்மையினர், அனைத்து வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஆட்டோ டிரைவர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை மாலை தி.மு.க. சட்டத்துறை சார்பில் சட்ட அரசியல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் பெ.ரகு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×