search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாம்
    X
    போலியோ சொட்டு மருந்து முகாம்

    குமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் 17-ந்தேதி நடக்கிறது

    குமரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் 17-ந்தேதி நடக்கிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகளை தாக்கும் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை உலகிலிருந்து முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது.

    1997-ம் ஆண்டுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் போலியோவால் பாதித்த குழந்தைகள் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் ஜனவரி 2011 முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படாததால் 27.03.2014 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடாக சான்றளிக்கப்பட்டது.

    2016-ம் ஆண்டு முதல் வாய்வழியாக மட்டும் அல்லாமல் ஊசி மூலமாகவும் (ipv) போலியோ மருந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் ஒரே கட்டமாக 17-1-21 அன்று நடைபெற உள்ளது.

    இந்த முகாம்கள் மூலம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 400 குழந்தைகள் பயன்பெறுவார்கள். நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 1,236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 737 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 14-ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. வருகிற 17-ந்தேதி நடைபெறும் போலியோ சொட்டுமருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×