search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிமுத்தாறு அருவி
    X
    மணிமுத்தாறு அருவி

    மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
    அம்பை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக, அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 1,132 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் மணிமுத்தாறு, மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி மற்றும் தோட்ட பகுதிகளில் நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி நிலவரப்படி, மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2,959 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் ஒரே நாளில் சுமார் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து 107.40 அடியை எட்டியது.
    Next Story
    ×