search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருஞ்சாணி அணை
    X
    பெருஞ்சாணி அணை

    குமரியில் சாரல் மழை- அணைகளில் இருந்து 1134 கனஅடி தண்ணீர் திறப்பு

    குமரியில் சாரல் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 1134 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏறபட்டது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. நாகர்கோவிலில் மாலை முதலே லேசான மழை தூறியது. இரவு பரவலாக சாரல் மழை பெய்தது.

    கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு, புத்தன் அணை, சுருளோடு பகுதிகளி லும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிகபட்சமாக 3.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்தது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஆனால் அருவியில் குளிப்பதற்கு குறைவான அளவு கூட்டமே இருந்தது.

    மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் அணைகளில் திறக்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தற்போது கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியாக உள்ளது. அணைக்கு 381 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 730 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.19 அடியாக உள்ளது. அணைக்கு 184 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 404 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×