search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    சென்ட்ரல்-ஐதராபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-ஐதராபாத் இடையே சிறப்பு ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் மாலை 4.45 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    * கொச்சுவேலி-நிலாம்பூர் (வண்டி எண்: 06349) இடையே தினசரி சிறப்பு ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இரவு 8.50 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக நிலாம்பூர்-கொச்சுவேலி (06350) இடையே தினசரி சிறப்பு ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு நிலாம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-ஐதராபாத் (02603) இடையே சிறப்பு ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் மாலை 4.45 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக ஐதராபாத்-எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (02604) இடையே சிறப்பு ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும்

    * லோக்மான்யா திலக்-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (வண்டி எண்: 02163) இடையே இயக்கப்பட்டு வந்த பண்டிகை கால சிறப்பு ரெயில் டிசம்பர் 31-ந் தேதி வரையிலும், எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-லோக்மான்யா திலக் (02164) இடையே இயக்கப்பட்டு வந்த பண்டிகை கால சிறப்பு ரெயில் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுகிறது.

    * காந்திதாம்-நெல்லை (09424) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில் வருகிற 7, 14, 21, 28-ந் தேதிகளிலும், நெல்லை-காந்திதாம் (09423) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில் 10, 17, 24, 31-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×