search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    ‘புரெவி’ என்பது ஒரு தாவரத்தின் பெயர்

    தற்போது உருவான புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது மாலத்தீவு நாடு வழங்கிய பெயர்.
    ஒவ்வொரு புயல் உருவாகும் போதும் அதற்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் பெயர்களை குறிப்பிட்டு வழங்கும். அதன்படி, வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகள் தலா 13 பெயர்களை வழங்கியிருந்தன.

    கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி ஒரு புயல் வங்க கடலில் உருவானது. அதற்கு ஈரான் நாடு வழங்கியிருந்த ‘நிவர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ‘நிவர்’ என்பதற்கு வெளிச்சம் என்று பொருள். இந்த நிலையில் தற்போது உருவான புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது மாலத்தீவு நாடு வழங்கிய பெயர் ஆகும். ‘புரெவி’ என்பது ஒரு தாவரத்தின் பெயர் என கூறப்படுகிறது.
    Next Story
    ×