search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பைக்கு சிறப்பு ரெயில்

    தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வருகிற 7-ந் தேதி முதல் மதுரை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    மதுரை:

    தென்னக ரெயில்வேயில் தமிழகத்திற்குள் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் ரெயில்களை இயக்குவதற்கு பதிலாக பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பாரபட்சமாக தென்மாவட்ட பயணிகளுக்கு வசதியாக இருக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவில்லை. இது குறித்து மும்பை வாழ் தமிழர்கள் மற்றும் தென்மாவட்ட ரெயில் பயணிகள் ஆகியோர் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், அடுத்தமாதம் முதல் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து வருகிற 7-ந் ே-தி முதல் மும்பைக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06340) திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 11 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில், மும்பையில் இருந்து வருகிற 8-ந் தேதி முதல் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06339) செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படுகிறது.

    வியாழன், வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

    இந்த ரெயில்கள் வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், மதனப்பள்ளி ரோடு, கதிரி, தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், யாட்கிர், கல்புர்கி, சோலாப்பூர், குர்த்வாடி, டான்ட், புனே, கல்யாண், தானே, தாதர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையலறைப்பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும்.

    மேலும் நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் ரெயில் மட்டும் நாமக்கல் ரெயில் நிலையத்திலும், மும்பையில் இருந்து வரும் ரெயில் மகாராஷ்டிர மாநிலம் கர்ஜாட் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×