search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புயல் கரையை கடக்க மேலும் 4 மணி நேரம் ஆகும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

    நிவர் புயல் நிதானமாக கரையை கடந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. இந்த புயல் நள்ளிரவு 3 மணியளவில் கரையை கடக்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    ஆனால், புயலின் மையப்பகுதி கடக்கும் வேகம் மெதுவாக உள்ளதால் நிவர் புயல் கரையை கடக்க மேலும் கால தாமதம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-

    நிவர் புயல் 16 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மிகவும் மெதுவாக வருவதால் புயல் கரையை கடக்க மேலும் 4 மணி நேரம் ஆகலாம்.  

    நிவர் புயல் புதுச்சேரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் புயல் கரையை கடந்து வரும் நிலையில் புதுச்சேரி, சென்னையில் மழை பெய்து வருகிறது. புயலின் மையப்பகுதி  16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.


    Next Story
    ×