search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் வீச்சு (இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புகைப்படம்)
    X
    புயல் வீச்சு (இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புகைப்படம்)

    145 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

    நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 145 கி.மீட்டர் என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நிவர் புயலின் தற்போதைய நிவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-

    அதிதீவிர நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

    புயல் கரையை கடக்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புயலின் மையப்பகுதி புதுச்சேரி கடற்கரை பகுதியை இன்னும் 3 மணி நேரத்திற்குள் கடக்கும். 

    அப்போது புயல் காரணமாக காற்றின் வேகம் 120 முதல் 130 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×