search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ஒரு சவரன் ரூ.37,976-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இன்று தொடர்ந்து 3-வது நாளாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.38,240-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.37,976-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.33 குறைந்து, ரூ.4,747 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.66,700 ஆக உள்ளது ஒரு கிராம் வெள்ளி 66.70-க்கு விற்கிறது.

    தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற-இறக்கம் காணப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் பவுனுக்கு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

    அதன்பின்னர் விலை ரூ.38 ஆயிரத்துக்கு மேலேயே இருந்து வந்த நிலையில் 3 நாட்களாக விலை சரிந்து, இன்று தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்குள் வந்திருக்கிறது. 3 நாட்களில் பவுனுக்கு ரூ.592 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து விலை குறையும் என்று நடுத்தர, ஏழை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
    Next Story
    ×