search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.38,408-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் இன்று குறைவு காணப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 568-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38 ஆயிரத்து 408-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4801 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.68 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.10-க்கு விற்கிறது.

    தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 10-ந்தேதி தங்கம் விலை ரூ.39 ஆயிரத்துக்குள் வந்தது. அன்று பவுன் ரூ.38 ஆயிரத்து 240-க்கு விற்றது.

    அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.
    Next Story
    ×