
8 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கோவையில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை. புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இதனிடையே கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன் கள பணியாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.