search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோளப்பயிர்களை தாக்கிய வெட்டுக்கிளிகள்
    X
    சோளப்பயிர்களை தாக்கிய வெட்டுக்கிளிகள்

    சோளப்பயிர்களை தாக்கிய வெட்டுக்கிளிகள்- 50 ஏக்கர் நாசம்

    சோள பயிர்களை தாக்கும் பச்சை வெட்டுக்கிளிகளால், பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் வட்டாரங்களில் சோளம், மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பயிர்கள் ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன. இதற்கிடையே திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள், சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்கு படையெடுக்கின்றன.

    பின்னர் அவை சோள பயிர்களில் தண்டு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தோகை அனைத்தையும் முழுமையாக தின்று விடுகின்றன. ஒரு வயலில் சோள பயிர்களின் தோகையை தின்று முடித்ததும், அடுத்த வயலுக்கு கூட்டமாக படையெடுத்து செல்கின்றன.

    அவ்வாறு ஒவ்வொரு வயலாக சென்று சோள பயிர்களை தாக்கும் பச்சை வெட்டுக்கிளிகளால், பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் 50 ஏக்கர் சோள பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×