என் மலர்

  செய்திகள்

  தமிழன்னை சிலை முன்பு திடீர் போராட்டம்
  X
  தமிழன்னை சிலை முன்பு திடீர் போராட்டம்

  தமிழன்னை சிலை முன்பு திடீர் போராட்டம்- பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  மதுரை:

  தமிழ்நாடு உதயமான நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தமிழன்னை சிலைக்கு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  பிறகு, தமிழன்னை சிலை முன்பு அமர்ந்த அவர்கள், நீட் தேர்வு ரத்து, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  Next Story
  ×