search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கலங்கலாக இருப்பதையும் அதில் வந்த புழுக்களையும் படத்தில் காணலாம்.
    X
    குடிநீர் கலங்கலாக இருப்பதையும் அதில் வந்த புழுக்களையும் படத்தில் காணலாம்.

    குடிநீருடன் புழுக்கள் வந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

    ரேஸ்கோர்ஸ் குடியிருப்புகளுக்கு குடிநீருடன் புழுக்கள் கலந்து வந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    கோவை:

    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இதில் வருவாய் துறை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் 200 வீடுகள் உள்ளன. இங்கு உள்ள தரைமட்ட தொட்டியில் சிறுவாணி குடிநீர் சேகரிக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுவது வழக்கம். இங்குள்ள வீடுகளுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீர் கலங்கிய நிலையில் இருந்தது. மேலும் அந்த தண்ணீரில் புழுக்கள் மற்றும் அரைத்தவளை போன்று இருந்ததால் குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தண்ணீர் வந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, குடிநீரை வடிகட்டி அனுப்பும் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீருடன் புழுக்கள் வந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    இது குறித்து அரசு ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போது, இங்குள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதம் ஆகி விட்டது. இதனால் அடியில் தேங்கி கிடந்த தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி விட்டன. தற்போது குடிநீருடன் சேர்ந்து புழுக்கள் வந்து விட்டன. எனவே அந்த தண்ணீரை பயன்படுத்தினாலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்குள்ள தரைமட்ட தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×