search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையம்
    X
    ஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையம்

    ஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை

    சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் நல்வாழ்வு மையத்தில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய 750 படுக்கைகள், 110 வெண்டிலேட்டர் கருவிகள், 60 அதிவேக ஆக்சிஜன் செலுத்தும் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சுகாதாரத்துறை அமைச்சரால் ‘கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம்’ தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த மையத்தில் தானியங்கி உடல் பருமன் குறியீடு அளவிடுதல், கொரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புகளை கண்டறிய மூச்சுத்திறனாய்வு மற்றும் 6 நிமிட நடைபயிற்சியில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல், இயன் முறை பயிற்சி, கண் பரிசோதனை, மனநல மருத்துவரின் ஆலோசனை உள்ளிட்ட 11 வகையான சிகிச்சை வழங்கப்படுகிறது.

    அந்தவகையில் இந்த மையத்தில் தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். மேலும் அவர்களின் மனசோர்வு நீங்கி மீண்டும் உற்சாகமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இங்கு 150 பேருக்கு மீண்டும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கொரோனாவால் நுரையீரல் பாதிப்படைந்த 98 சதவீத நோயாளிகள், முற்றிலுமாக நுரையீரல் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×