search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடைபாதையில் வளர்ந்து உள்ள முள்செடிகளை படத்தில் காணலாம்.
    X
    நடைபாதையில் வளர்ந்து உள்ள முள்செடிகளை படத்தில் காணலாம்.

    நடைபாதையில் உள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நடைபாதையில் உள்ள முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பிள்ளையார்பட்டி:

    தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கண்காணிப்பில் உள்ள சாலையோர நடைபாதையில் புல் மற்றும் முள்செடிகள் வளர்ந்து நடப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த நடைபாதையில் நடக்க முடியாததால் பெரும்பாலானவர்கள் சாலை ஓரமாகவே நடந்து சென்று வருகின்றனர்.

    இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வல்லத்தை அடுத்த சாஸ்த்ரா நகர் மற்றும் மேலவஸ்தாசாவடி, தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரில் சாலையோரங்களில் உள்ள நடைபாதையில் புள் மற்றும் முள்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

    இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சாலையில் உள்ள நடைபாதையில் பெரும்பாலோனோர் நடந்து தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு சென்று வந்தனர். தற்போது இந்த நடைபாதையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆதலால் இந்த தனியார் நிறுவனத்தினர், தங்களது கண்காணிப்பில் உள்ள சாலையை ஆய்வு செய்வதுடன், சாலையோர நடைபாதையில் வளர்ந்துள்ள புற்கள் மற்றும் முள்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×