search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கண்டெய்னரில் கடத்திய ரூ.45 லட்சம் குட்கா பறிமுதல்

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் குட்கா போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஷேசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் சுதாகர் ஆகியோரின் ஆலோசனையை பெற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

    தனது நேரடி தலைமையிலான தனிபோலீஸ் படையை களத்தில் இறக்கினார். குட்கா கடத்தி வந்த கண்டெய்னரை சென்னை மயிலாப்பூர் பகுதியில் தனிப்படையினர் மடக்கி பிடித்தனர். கன்டெய்னரில் கடத்திவரப்பட்ட 5½ டன் எடையுள்ள குட்கா போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும்.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவராஜ் (26), திருவண்ணாமலையை சேர்ந்த அரவிந்தன் (20), விருதுநகரை சேர்ந்த முத்துராஜ் (40) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட செந்தில், அவரது கூட்டாளி முனியப்பன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×