search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் பழனிசாமி
    X
    முதலமைச்சர் பழனிசாமி

    “வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது“ - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

    * கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். 

    * புதுக்கோட்டையில் அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன

    * புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது

    * சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன

    * முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஸ்டாலின் அரசைப்பற்றி குறை கூறுகிறார்

    * 813 விவசாயிகளுக்கு  வேளாண் உபகரணங்களுக்கு சுமார் 8 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது

    * பிரதம மந்திரி குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் 2016 முதல் 9 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன

    * கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது

    * 2020-21 ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி கடன் வழங்க இலக்கு

    * மிக அதிக விளைச்சல் வரும்போது அரசால் முழுமையாக கொள்முதல் செய்து சேமிக்க இயலாது

    * அதிக மூட்டைகளை விவசாயிகள் இருப்பு வைத்துக்கொள்ள முடியும்

    * வரி மற்றும் இடைத்தரகர் கமிஷனில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் - முதலமைச்சர்

    * மத்திய அரசின் வேளாண் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பாதுகாப்பானது

    * வியாபாரி-விவசாயி இடையே ஒப்பந்தம் விருப்ப அடிப்படையில் மேற்கொள்ளப்படும்

    * விலையேறினாலும் விவசாயிகளுக்கு அதன் பலன் நேரடியாக கிடைக்கும்

    * விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு

    * பொதுப்பணித்துறை சார்பாக 272 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன - முதலமைச்சர்

    * மழை நீர் முறையாக சேமிக்கப்படுகிறது - முதலமைச்சர்

    * கடைமடை வரை முழுமையாக நீர் சென்றடைகிறது - முதலமைச்சர்

    * மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து கால்வாய் மூலம் வறட்சி பகுதிகளுக்கு கொண்டுவர நடவடிக்கை

    * முதல்கட்டமாக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    * காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வரும் ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்

    * டெல்டா பகுதிகள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது
    Next Story
    ×