
தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* பொதுமுடக்கத்தால் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
அளிக்கப்படும்.
* ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும், மசாஜ் செய்யவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
* சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.