search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திண்டுக்கல் சிறுமி மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டன

    திண்டுக்கல் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு மருத்துவ நல சங்கம், தமிழ்நாடு முடி திருத்தம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முடி திருத்தம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் கடைகள் உள்ளன. இதன்படி சுமார் 1 லட்சம் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று திரண்டு கிண்டி ஆசர்கானா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சங்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.கே.ராஜா மற்றும் நிர்வாகிகள் கேர், அருண், திருவேங்கடம் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக சங்க நிர்வாகியான ராஜா கூறும் போது, “சென்னையில் மட்டும் 15 ஆயிரம் கடைகள் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் கடைகளை மூடி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்” என்றும் கூறினார்.
    Next Story
    ×