search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 105 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 11 ஆயிரத்து 24 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 8 ஆயிரத்து 105 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 11 ஆயிரத்து 24 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 950 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 98.05 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 97.63 அடியானது.
    Next Story
    ×