search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் 1,295 பேர், கோவையில் 574 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக நேற்றைய விவரம்

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 659 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 659 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 646 பேர். 

    விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 நபருக்கும், சாலை மார்க்கமாக சொந்த ஊர் வந்தவர்களில் 7 நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 610 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்றைய 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 31
    செங்கல்பட்டு - 335
    சென்னை - 1,295
    கோவை - 574
    கடலூர் - 137
    தர்மபுரி - 41
    திண்டுக்கல் - 32
    ஈரோடு - 161
    கள்ளக்குறிச்சி - 41
    காஞ்சிபுரம் - 207
    கன்னியாகுமரி - 97
    கரூர் - 56
    கிருஷ்ணகிரி - 75
    மதுரை - 88
    நாகை - 48
    நாமக்கல் - 161
    நீலகிரி - 80
    பெரம்பலூர் - 14
    புதுக்கோட்டை - 88
    ராமநாதபுரம் - 12
    ராணிப்பேட்டை - 82
    சேலம் - 378
    சிவகங்கை - 27
    தென்காசி - 38
    தஞ்சாவூர் - 266
    தேனி - 68
    திருப்பத்தூர் - 58
    திருவள்ளூர் - 275
    திருவண்ணாமலை - 147
    திருவாரூர் - 56
    தூத்துக்குடி - 91
    திருநெல்வேலி - 93
    திருப்பூர் - 137
    திருச்சி - 97
    வேலூர் - 139
    விழுப்புரம் - 112
    விருதுநகர் - 16
    விமான நிலைய கண்காணிப்பு
    வெளிநாடு - 0
    உள்நாடு - 6
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 5,659
    Next Story
    ×