search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் இருந்து இன்று முதல் 2000 கனஅடி நீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை

    திருமங்கலம் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. பருவமழை தொடங்கும் முன்னரே மழை கைகொடுத்ததால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 62.40அடி நீர்மட்டம் உள்ளது. மதுரை, மேலூர், கள்ளந்தரி, பேரணை பகுதி பாசனத்திற்காகவும், மாநகர குடிநீருக்காகவும் 1872 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

    திருமங்கலம் பகுதிக்கும் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு 150 கனஅடிநீர் என மொத்தம் 2022 கனஅடிநீர் இன்றுகாலை முதல் திறக்கப்படுகிறது.

    இதனால் வைகையாற்றில் நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. ஆற்றங்கரையோரம் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றில் துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    ஆற்றை கடக்க பாலங்களை பயன்படுத்த வேண்டும். நீர் அதிகமாக வருவதால் அதில் இறங்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.80 அடியாக உள்ளது. 730 கனஅடிநீர் வருகிறது. 1400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடி, 1 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 1 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×