search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 589 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 554 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 179
    செங்கல்பட்டு - 2,189
    சென்னை - 11,043
    கோவை - 5,117
    கடலூர் - 1,492
    தர்மபுரி - 1,002
    திண்டுக்கல் - 484
    ஈரோடு - 1,120
    கள்ளக்குறிச்சி - 498
    காஞ்சிபுரம் - 895
    கன்னியாகுமரி - 990
    கரூர் - 492
    கிருஷ்ணகிரி - 862 
    மதுரை - 696
    நாகை - 528
    நாமக்கல் - 973
    நீலகிரி - 930
    பெரம்பலூர் - 130
    புதுக்கோட்டை - 718
    ராமநாதபுரம் - 154
    ராணிப்பேட்டை - 400
    சேலம் - 2,768
    சிவகங்கை - 264
    தென்காசி - 442
    தஞ்சாவூர் - 1,169
    தேனி - 527
    திருப்பத்தூர் - 550
    திருவள்ளூர் - 1,589
    திருவண்ணாமலை - 972
    திருவாரூர் - 1,079
    தூத்துக்குடி - 593
    திருநெல்வேலி - 857
    திருப்பூர் - 1,633
    திருச்சி - 768
    வேலூர் - 885
    விழுப்புரம் - 997
    விருதுநகர் - 292
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 2
    உள்நாடு - 25
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

    மொத்தம் - 46,306
    Next Story
    ×