search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    வேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன்?- முதலமைச்சர் விளக்கம்

    வேளாண் மசோதாவை ஆதரிப்பது ஏன் என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,617 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

    * ராமநாதபுரத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

    * மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

    * ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் குறைதீர்ப்பு திட்டத்தில் பெறப்பட்ட 9,302 மனுக்களில் 5,180 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    * நான் விவசாயிதான்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.

    * அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினால் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    * மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின்.

    * ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான்.

    * 3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது.

    * விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும்.

    * வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும்.

    * கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, ‘அதிமுக ஆட்சியே தொடரும்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
    Next Story
    ×