search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திண்டிவனம் பெண் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திமுக எம்எல்ஏவாக சீத்தாபதி சொக்கலிங்கம், அவரது கணவர் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சீத்தாபதி சொக்கலிங்கம்(வயது 65). இவரது கணவர் சொக்கலிங்கம். இவர் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார். கணவர்-மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக இருமல், சளி உள்ளிட்ட பிரச்சினை இருந்தது. கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.  இந்த பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., வானூர் சக்கரபாணி எம்.எல்.ஏ. ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×