search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வைர நகை கொள்ளை வழக்கில் பேராசிரியர் உள்பட 5 பேர் கைது

    சென்னை தொழில் அதிபரிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள வைர நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பேராசிரியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆசாரங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 45). தொழில் அதிபர். இவர் சென்னை பகுதியில் எலெக்ட்ரிக் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ஆசாரங்குப்பத்துக்கு வந்தார். அப்போது கருணாநிதி அவருக்கு சொந்தமான வைர கற்கள் பதித்த 52.6 கிராம் நகைகளை விற்க முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று நகையை விற்பதற்காக கருணாநிதி அவரது நண்பர்களான ராவணன், வக்கீல் பிரகலாதன், ஆகியோருடன் ஒரு காரில் கூட்டேரிப்பட்டுக்கு சென்றார். அப்போது அங்கு சென்னையை சேர்ந்த புரோக்கர் அருள் முருகன், செந்தில் மற்றும் சிலர் ஒரு காரில் அங்கு வந்தனர். சிறிதுதூரம் சென்று நகை விற்பனை தொடர்பாக பேசி முடிவு செய்யலாம் எனமுடிவு எடுத்தனார். இதை தொடர்ந்து 2 கார்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    கோபாலாபுரம் என்ற இடத்தில் கருணாநிதியின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கருணாநிதி சென்ற காரை வழிமறித்து கருணாநிதி மற்றும் காரில் இருந்தவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி கத்தி முனையில் கருணாநிதி விற்பனை செய்ய கொண்டு வந்த ரூ. 4 கோடி மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் வக்கீல் பிரகலாதன், கருணாநிதி ஆகிய 2 பேரும் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையையும் கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து புரோக்கர் அருள் முருகன், செந்தில் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் 2 பேரிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கருணாநிதியிடம் வைர நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தீவனூர் பகுதியை சேர்ந்த என்ஜீனியர் அருள் முருகன் (வயது 24), பரந்தாமன் (29), அவரது உறவினர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் (31), சித்தூர் நயனம் பள்ளி மகேஷ் (21), சித்தூர் பண்டப்பள்ளியை சேர்ந்த விஜயசேகர் (31) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×