search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாமல்லபுரம் காவல் நிலைய தனிப்பிரிவில் தலைமைக் காவலர் ஈஸ்வரன்; காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், மதுரை கூடல்புதூரில் காவலர் நீலமேகம், சேத்துப்பட்டு முதல் நிலை பெண் காவலர் எழிலரசி, யானைக்கவுனி காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ்; பட்டாபிராம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், மாதவரம் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமைக் காவலர் மோகன், துறைமுகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை புதுப்பேட்டை, பணியிடைப் பயிற்சி மைய உதவி ஆய்வாளர் சேகர், வேப்பேரி, குற்ற ஆவணக் காப்பகத்தில் பெண் உதவி ஆய்வாளர் சாந்தி, தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் அன்பரசன்; திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் நடராஜன், நாகர் கோவில் காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், திருச்சி சிறுகனூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம்;, திருவெண்காடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அலெக் ஸாண்டர், சேலம் மாநகர வடக்கு போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் அம்பேத்கார்; ஆகியோர் உடல் நலக் குறை வால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் காவலர் சிவக்குமார், ஆயுதப்படை காவலர் ராஜேஸ்கண்ணன்; தல்லாகுளம் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் ஜோதி; திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கபாண்டி; ஆயுதப்படை காவலர் கார்த்திக்; புதுப்பேட்டை, ஆயுதப்படை, 8-ம் அணியில் இரண்டாம் நிலைக் காவலர் ராஜா; புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன்; மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர்; ஆயுதப்படை தலைமைக் காவலர் உலகநாதன் ஆகியோர் பல்வேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

    உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×