என் மலர்

  செய்திகள்

  கொரோனாவில் இருந்து மீண்ட முதியவருக்கு மருத்துவ குழுவினர் பூங்கொத்து கொடுத்தபோது எடுத்த படம்
  X
  கொரோனாவில் இருந்து மீண்ட முதியவருக்கு மருத்துவ குழுவினர் பூங்கொத்து கொடுத்தபோது எடுத்த படம்

  கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய 97 வயதான முதியவருக்கு மருத்துவ குழு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
  பெரம்பூர்:

  சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 97). இவர், அதே பகுதியில் கோவிலில் குருக்களாக உள்ளார். முதியவர் கணேசன் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் 25 சதவிகிதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த 19-ந் தேதி அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

  இந்த நிலையில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த முதியவர் கணேசன், கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டார். பூரண குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பினார்.

  ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி நிலைய அதிகாரி ரமேஷ், கொரோனா மருத்துவ குழு தலைவர் கணேசன் உள்ளிட்டோர் முதியவர் கணேசனுக்கு பூங்கொத்து மற்றும் பழங்கள் கொடுத்து மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×