search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் காட்சி.
    X
    சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் காட்சி.

    மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக பள்ளிக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

    ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை வனப்பகுதிகளில் சர்க்கார்பதி, எருமைபாறை, கோழிகமுத்தி, வெள்ளிமுடி, கூமாட்டி உள்ளிட்ட 17 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் அந்தந்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் மாணவ- மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங் கப்பட்டு உள்ளன. மேலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் மின்சாரம், தொலைக் காட்சி, செல்போன் போன்ற வசதிகள் இல்லாததால் மலைவாழ் மக்களின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று பாடம் படிக்க முடியாத நிலை உள்ளது. அவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் ஆழியாறு அரசு உயர்நிலைப்பள்ளியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் 18 பேருக்கு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நேரில் சென்று, பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

    ஆழியாறு புளியங்கண்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் சில வீடுகளுக்கு மட்டும் மின்சார வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அங்கு சென்று ஆய்வு நடத்தப்பட்டது.

    இதையடுத்து அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்களை கொண்டு நேரில் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×