என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்
Byமாலை மலர்9 Aug 2020 5:47 PM GMT (Updated: 9 Aug 2020 5:47 PM GMT)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 53 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 994 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 283
செங்கல்பட்டு - 2,728
சென்னை - 11,654
கோவை - 1,665
கடலூர் - 2,113
தர்மபுரி - 119
திண்டுக்கல் - 603
ஈரோடு - 367
கள்ளக்குறிச்சி - 840
காஞ்சிபுரம் - 2,718
கன்னியாகுமரி - 1,750
கரூர் - 281
கிருஷ்ணகிரி - 471
மதுரை - 1,265
நாகை - 521
நாமக்கல் - 335
நீலகிரி - 152
பெரம்பலூர் - 227
புதுக்கோட்டை - 1,012
ராமநாதபுரம் - 421
ராணிப்பேட்டை - 1,399
சேலம் - 1,078
சிவகங்கை - 449
தென்காசி - 1,172
தஞ்சாவூர் - 1,288
தேனி - 3,014
திருப்பத்தூர் - 503
திருவள்ளூர் - 3,513
திருவண்ணாமலை - 1,857
திருவாரூர் - 262
தூத்துக்குடி - 1,821
திருநெல்வேலி - 2,202
திருப்பூர் - 330
திருச்சி - 1,266
வேலூர் - 1,226
விழுப்புரம் - 452
விருதுநகர் - 1,766
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 81
உள்நாடு - 130
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 53,336
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X