search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் அரசன் சுழல்கலப்பையினை ஆய்வுசெய்த போது எடுத்த படம்.
    X
    திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் அரசன் சுழல்கலப்பையினை ஆய்வுசெய்த போது எடுத்த படம்.

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் சுழல்கலப்பைகள்

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் சுழல்கலப்பைகள் வழங்கப்பட உள்ளது என்று திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் அரசன் கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைதுறையின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறுவகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள், எண்ணெய் வித்துகள், மர எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் எண்ணெய்ப்பனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதில் பயறுவகை திட்டத்தின் கீழ் ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பமாக பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பண்படுத்த டிராக்டரால் இயங்கக்கூடிய சுழல்கலப்பைகள் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் அரசன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திற்கு சுழல்கலப்பை இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் முதல் ஒரு எண்ணிற்கு ரூ.34 ஆயிரம் மானியத்தில் வழங்க 16 மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறு, குறு, மலைசாதி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ஒரு எண்ணிற்கு ரூ.42 ஆயிரம் மானியத்தில் வழங்க 3 இலக்காக பெறப்பட்டுள்ளது.

    ஆக மொத்தம் 19 சுழல்கலப்பைகள் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் மானியத்தில் திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் சுழல் கலப்பைகள் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

    இதன் ஒருபகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அவினாசி வட்டாரத்தில் வழங்கப்பட்ட சுழல்கலப்பையினை ஆய்வுசெய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×